×

பலதார மணத்தை தடை செய்ய சட்டம் அசாம் முதல்வர் தகவல்

கவுகாத்தி: அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கவுகாத்தியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பலதார மணத்தை தடை செய்வதற்கு சட்டம் கொண்டு வருவது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ரூமி குமாரி புகான் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், மாநில அரசு சட்டம் கொண்டுவர முடியும் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை அரசு ஏற்றுள்ளது. இந்த நிதியாண்டுக்குள் பலதார மண தடை சட்டம் சட்ட பேரவையில் நிறைவேற்றப்படும். இதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தலில் மதம்,இனம்,மொழி என்ற அடிப்படையிலான பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’’ என்றார்.

The post பலதார மணத்தை தடை செய்ய சட்டம் அசாம் முதல்வர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Assam ,Chief Minister ,Guwahati ,Himanta Biswa Sharma ,
× RELATED அசாமில் மாபியா ஆட்சி நடக்கிறது: பிரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு